லக்னோ, உத்தரபிரதேசம் மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பஹ்வான் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ரகினி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பலி இந்நிலையில், மாணவி ரகினி நேற்று மாலை தனது தோழியுடன் கிராமத்தில் உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, கிராமத்தின் தெருவில் நடந்து சென்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் கம்பம் சிறுமி ரகினி மீது திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிறுமி ரகினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/schoolgirl-killed-by-falling-electric-pole




