வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சான் பிரான்சிஸ்கோ - லாஸ் ஏஞ்சல்ஸ் மோதல் இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கார்லின் மன்ரோ அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் வெற்றி இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ 19.1 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து விசிய லாஸ் ஏஞ்சல்ஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/san-francisco-unicorns-vs-los-angeles-knight-riders-match-on-major-league-cricket




