கோரபுட் ஒடிசாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் பத்மாப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தர்பகுடா பகுதியில், கழிவுநீர் வெளியேறும் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு சென்ற 3 பேர் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. 3 பேர் பலி அவர்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்றுள்ளனர். இதில், போதிய பிராண வாயு இல்லாமலோ அல்லது விஷவாயு தாக்குதலாலோ அவர்கள் சுய நினைவற்று போயுள்ளனர். இதனால், அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதுதொடர்பான தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைவாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் உயிரிழந்து கிடந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவு அடிப்படையிலேயே 3 பேரின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் பற்றி தெரிய வரும் என பத்மாப்பூர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பிரதான் கூறினார். உயிரிழந்தவர்கள் 3 பேரும் ஹரீஷ்சந்திரா பீர் (வயது 46), பிரகாஷ் லிமா (வயது 47) மற்றும் அலோக் கரத் (வயது 45) என அடையாளம் காணப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/tragedy-in-odisha-3-die-while-cleaning-sewage-tank




