சென்னை, 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை. சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. போக்குவரத்து சுதந்திரம் இந்நிலையில் சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசுகையில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கிராமப்புறங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மினி பேருந்து சேவைகளையும் அதிகரித்து, பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரத்தை வழங்க வேண்டும். அரசின் கடமை பெண்கள் வேலைக்குச் செல்லவும், சொந்தமாகத் தொழில் தொடங்கவும் தடையற்ற, பாதுகாப்பான போக்குவரத்து வசதி முதன்மைத் தேவையாகும். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் படிப்பைப் பாதியில் நிறுத்தும் நிலை மாற வேண்டும். பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசின் கடமையாகும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/women-need-freedom-of-transport-soumya-anbumani




