குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தற்போது சீன பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹாலிவுட் படங்களான ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியு டே’ மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ ஆகியவற்றுடன் பாக்ஸ் ஆபிஸில் போட்டியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் திரைப்படமான ‘நியூ லாய்’ (Niu Lai) தற்போது எதிர்பாராத வகையில் பாக்ஸ் ஆபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது. வெறும் ரூ.1 லட்சம் அளவிலான பட்ஜெட்டில் இரண்டு பேர் (Xin Yumeng மற்றும் Sun Lifang) இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளனர். ஆரம்பத்தில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சீனாவில் வெளியான ‘நியூ லாய்’ திரைப்படம் ஆரம்பத்தில் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. முதல் 10 நாட்களில் 300-க்கும் குறைவான பார்வையாளர்களே டிக்கெட் வாங்கியதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலான விமர்சனங்கள் படத்தின் காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் அனிமேஷன் மற்றும் குரல் பதிவு உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. சிலர் படத்தை மிகவும் மோசமானது என்றும், ‘ஏஐ-யை விட மோசம்’ என்றும் விமர்சித்தனர். ஆனால், இந்த விமர்சனங்களே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறின. படத்தின் காட்சிகள் மீம்களாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகவும் தொடங்கியதைத் தொடர்ந்து, “உண்மையிலேயே படம் இவ்வளவு மோசமாக இருக்கிறதா?” என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். ரூ.20 கோடியை நெருங்கிய வசூல் இதன் விளைவாக ‘நியூ லாய்’ படத்தின் வசூல் திடீரென அதிகரித்துள்ளது. சீன பாக்ஸ் ஆபிஸில் தரவுகளின்படி, படம் தற்போது 14.9 மில்லியன் யுவானுக்கும் அதிகமாக, இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘ஸ்பைடர்ஃமேன்’, ‘தி ஒடிசி’ படங்களுடன் போட்டி குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தற்போது சீன பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹாலிவுட் படங்களான ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியு டே’ மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ ஆகியவற்றுடன் பாக்ஸ் ஆபிஸில் போட்டியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-chinese-film-niu-lai-rivals-spider-man-and-the-odyssey




