சென்னை, ஸ்ரீலீலாவுக்கு கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் கைநழுவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கைநழுவிய வாய்ப்புகள் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. ’குண்டூர்காரம்’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவருக்கு, கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் கைநழுவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அகில் அக்கினேனி நடிப்பில் வெளியான 'லெனின்' மற்றும் 'அனகனகா ஒக ராஜு' ஆகிய இரண்டு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை ஸ்ரீலீலா தவறவிட்டார். இந்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளன. இது தவிர, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'கிங்டம்' படத்திற்கும் இவரே முதல் தேர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பாக்யஸ்ரீ போர்ஸ் அந்த காதாபாத்திரத்தில் நடித்தார். அஜித் பட வாய்ப்பும் நழுவியதா? அதேபோல் மற்றொரு மாபெரும் பட வாய்ப்பும் ஸ்ரீலீலாவை விட்டு போயுள்ளதாக கூறப்படுகிறது. அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு காயாடு லோஹர் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய படங்கள் இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், ஸ்ரீலீலா தொடர்ந்து பிஸியாகவே இருந்து வருகிறார். தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாபெரும் படமான ‘ஓம்: சாப்டர் 1 - உதிரம்: தி பிளட் வுட்’திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/is-sreeleela-on-a-spree-of-losing-big-projects-in-tamil-and-telugu




