தூத்துக்குடி, குரும்பூரில் 10-ம் வகுப்பு மாணவியிடம் தவறான சைகை செய்தபோது, அதை தட்டிக்கேட்ட மாணவியின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியிடம் தவறான செய்கை செய்த வாலிபர் செங்கல்பட்டைச் சேர்ந்த குப்பன் மகன் கதிரவன் (வயது 33), தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் உள்ள பேக்கரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கதிரவன் குரும்பூர் பஜார் வீதியில் சென்று கொண்டிருந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரிடம் அநாகரிகமான முறையில் தவறான சைகை காட்டியுள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாயார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அந்த வாலிபரின் செயலைக் கண்டித்துள்ளார். கொலை மிரட்டல் தனது செயலைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், பொது இடத்தில் வைத்து அந்த மாணவியையும், அவரது தாயாரையும் அவதூறாகப் பேசி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குரும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். வாலிபர் போக்சோவில் கைது அவர் செய்த குற்றச்செயல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த வாலிபர், நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-pocso-for-making-inappropriate-gestures-towards-schoolgirl-threatening-to-kill-her




