பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தின் ஆவணப்பதிவிற்கு அனுமதி வழங்கி, கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். சம்பந்தப்பட்ட இடம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கோயிலின் தக்காரை சேர்க்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மடத்தின் சொத்துகள் தொடர்பான நிர்வாக அதிகாரம் தக்காரிடமே உள்ளது. இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டவிரோதமானது. எனவே பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மட நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ``பழனி முருகன் கோயில் நிலம் தொடர்பாக தனிநபர் பதிவுசெய்த பட்டா ரத்து செய்யப்படுகிறது. இதில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டணை சஸ்பெண்ட் செய்தது மட்டும் போதாது" எனத் தெரிவித்துள்ளனர். பழனி திருக்கோயில் மேலும் இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், வெள்ளதுரை மற்றும் சேதுபதி ஆகியோர் மீது போலி ஆவணங்களை உருவாக்குதல் (பிரிவு 336(3)), போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்களை உண்மை என நம்பவைத்து பயன்படுத்துதல் (பிரிவு 340(2)), ஏமாற்றுதல் மற்றும் சொத்துகளை முறைகேடாக அபகரித்தல் (பிரிவு 318(4)), குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் (பிரிவு 49) மற்றும் கூட்டுச் சதி (பிரிவு 61(2)) ஆகிய 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனி கோயில் சொத்துகள் முறைகேடாக பத்திரப் பதிவு; சார் பதிவாளர் சஸ்பெண்ட்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/palani-murugan-temple-land-registration-scam-court-order




