புதுடெல்லி, இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை உள்ளடக்கியதாக கூறப்படும் விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் பெறுமாறு மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த விவகாரத்தில் மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்கள் மூலம் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் கிடைப்பதாகவும், அவை விளம்பரப்படுத்தப்படுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு ஏற்கனவே மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரியது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/advertisements-related-to-child-sexual-abuse-on-instagram-summons-issued-to-meta




