சென்னை, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களை கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வணிகவியல் பாடப்பிரிவு தொடர்ந்து செயல்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். பிளஸ் ஒன் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாறும்படி கட்டாயப்படுத்த கூடாது. மேலும் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சூவர் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். நாப்கின் இயந்திரங்கள் நிறுவன வேண்டும். காலியாக உள்ள காவலர், தூய்மை பணியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அவர்கள் பிறப்பித்த உத்தரவில், “அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அரசு பரிசீலிக்கலாம். ஏனென்றால் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டு வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்த முடிகிறது. இதனால் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதில் இடையூறுகள் ஏற்படுகின்றன. வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதை உறுதி செய்யும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் இருந்து வாரத்தில் சில நாட்கள் மட்டுமே நேரடியாக வகுப்புகளை நடத்த இயலும் என்ற நிலை ஏற்பட்டாலும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்” என உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதே போல், “காணொளி மூலம் வகுப்புகளை நடத்துவதற்கான பிற மாற்று வழிகளையும் ஆராயலாம். அது நடைமுறைக்கு சாத்தியமாக இருந்தால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தல்களை வழங்கலாம்” என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசு தரப்பு வரும் 17-ந்தேதி நீதிமன்றத்தில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்” எனக் கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/online-classes-for-government-school-students-madurai-bench-of-the-high-court-orders-examination-of-feasibility




