சென்னை, மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது. முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய். முதல்-அமைச்சருக்கு காவல்துறையை கையாளத் திறனில்லை என்றால், அதைத் திறம்பட கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகட்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-pushed-people-to-live-in-fear-says-kanimozhi




