ஜி.பிஎ.ஸ் கருவியை நிறுவி அவற்றை கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல நாளை முதல் அனுமதியில்லை. ஜிபிஎஸ் டேட்டா கனிம வளத்தைச் சட்டவிரோதமாகக் கடத்துவதைத் தடுக்க, தமிழக அரசின் கனிமவளத்துறை கனிமம் ஏற்றும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொறுத்தி அவற்றை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் இணைக்க ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பிஎ.ஸ் கருவியை நிறுவி அவற்றை கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் (MiMaS Portal) இணைப்பதற்குக் கடந்த 31.08.2026 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 6.75 சதவிகித வாகனங்கள் மட்டுமே ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி MiMaS Portal-உடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, 30.09.2026-க்குள் கனிமங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தி, அவற்றை MiMaS Portal-உடன் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே 01.10.2026 முதல் கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கப்படும். ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்க இயலாது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் குவாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் 30.09.2026-க்குள் தங்களது வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தி பதிவு செய்துகொள்ள இறுதியாக அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டின் பல மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதேபோல் அறிவித்துள்ளனர். ஜி.பி.எஸ் பொறுத்தி MiMaS Portal-உடன் இணைக்கப்படாத வாகனங்கள் 01.10.2026 முதல் கனிமங்களை ஏற்ற முடியாது. ரூ.50 கோடி கனிம வளம் ஸ்வாஹா! - கடவூரில் மண் கொள்ளை ராஜ்ஜியம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/minerals-loading-vehicles-compulsory-connected-gps




