தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான துல்கர் சல்மானுக்கு, தமிழிலும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்த நிலையில் தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக துல்கர் சல் மான் கொந்தளித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "எனது பெயரில் போலி எக்ஸ் கணக்கை ஒரு நபர் தொடங்கியிருக்கிறார். அது எனது நிஜமான அக்கவுண்ட் கிடையாது. அதை யாருமே நம்பவேண்டாம். அந்த நபர் என்னைப் போல பல இடங்களில் 'கமெண்ட்' செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. படங்கள் பற்றி பதிவிடுவது, நடிகர்கள் பற்றி பதிவிடுவது, எனது குடும்பத்திற்கே வாழ்த்து செய்தி அனுப்புவது என அந்த நபர் செய்யும் விஷயங்கள் அத்துமீறி செல்கிறது. தேவையில்லாத குழப்பங்களை உண்டாக்குகிறது. இந்த கணக்கு பற்றி நான் புகார் அளித்திருக்கிறேன். ஆனால் இன்னும் 'எக்ஸ்' நிறுவனத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை" என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/fake-x-account-in-my-name-scam-dulquer-salmaan-condemns




