வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், சுனில், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் வசூலும் ரூ.150 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார் பங்கேற்று பேசும்போது, "இந்தக் காலத்தில் ஒரு விஷயத்தை ஒரு நிமிடத்துக்கு மேல் கவனித்து பார்ப்பது கடினம். ஆனால் பாசத்தால், அன்பால், சிரிப்பால் ஒரு படம் முழுவதையும் ரசிகர்களை பார்க்க வைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் நடந்திருக்கிறது. படத்தில் இருக்கும் சில காட்சிகளில் நடிக்க சூர்யா எப்படி ஒத்துக் கொண்டார்? என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சில நடிகர்கள் ஈகோவால் இதை செய்யமாட்டார்கள். சிலர் இதுபோன்ற விஷயங்கள் பிடிக்காது என்பார்கள். ஆனாலும் சூர்யாவின் இந்த மாறுபட்ட நடிப்பு பாராட்டுக்குரியது. சூர்யாவை நினைத்து பெருமைப்படுகிறேன். பல மனப் போராட்டங்களை கடந்து சாதித்தவர், சூர்யா. கொஞ்சம் பிசகினாலும் சூர்யாவின் கதாபாத்திரம் தவறாக மாறிவிடும். ஆனாலும் சிக்கலான அந்த கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து நல்ல நடிகர் என்பதை சூர்யா நிரூபித்து காட்டியுள்ளார்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/suriya-shines-in-complex-role-radhika-praises




