சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 2026. கால்நடை உதவி மருத்துவர், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட 31 பதவிகளுக்கான 170 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (31.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் 07.09.2026 முதல் 06.10.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் தேர்வாணைய இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். பிஇ, பிடெக், பிவிஎஸ்ஸி ஏஹெச், எம்பிஏ, எம்சிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ, ஏசிஎஸ், எம்வி எஸ்சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு குறித்த முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-tamil-nadu-government-departments-tnpsc-issues-notification-to-fill-170-vacancies




