டெல் அவிவ் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையான நண்பர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு இன்னும் ஒரு சில மணிநேரமே உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண ஆவலாக உள்ளனர். இதனை முன்னிட்டு, அர்ஜென்டினாவின் தூதர் ஆக்சல் வானிஷ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து பேசினார். அவரை வரவேற்ற நெதன்யாகு, அவருடன் கால்பந்து விளையாடினார். இதனை தொடர்ந்து, நெதன்யாகு வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மைலி என்னுடைய உண்மையான நண்பர். சிறந்த நண்பரும் கூட. உங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். அர்ஜென்டினாவுக்கு, நாளைய போட்டி உள்பட பல வழிகளில் ஆதரவு தெரிவிக்கிறோம் என பதிவிட்டு உள்ளார். டி-சர்ட் பரிசு அவருக்கு அர்ஜென்டினா தேசிய அணியின் டி-சர்ட் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. அதனை ஆர்வத்துடன் அவர் வாங்கி கொண்டார். இந்த ஆதரவுக்காக பதிலுக்கு அர்ஜென்டினாவின் ஜனாதிபதி மைலியும், நெதன்யாகுவுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். இதேபோன்று, இஸ்ரேலின் நிதி மந்திரி பெஜாலெல் ஸ்மோத்ரிச், தேசிய பாதுகாப்பு மந்திரி இதமர் பென்-குவிர், போக்குவரத்து துறை மந்திரி மிரி ரெஜிவ் உள்ளிட்டோரும் ஆதரவை வெளிப்படுத்தியதுடன், வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/netanyahu-football-supports-argentina




