துபாய், துபாயில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில் புகை எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து, விமானத்தை ராஜ்கோட்டில் அவசரத் தரையிறக்கம் செய்து 194 பயணிகள் உயிர் தப்பினர். அவசர தரையிறக்கம் இண்டிகோ விமானம் (IGO 1452) துபாயில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு வைக்கும் பகுதிடிலிருந்து திடீரென்று புகை வந்தது. புகை வந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, 194 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சென்ற துபாய்-மும்பை இண்டிகோ விமானம் ஒன்று, குஜராத்தில் உள்ள ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமான நிலைய நிர்வாகம் கூறியதாவது:- விமான நிலைய நிர்வாகம், "துபாயிலிருந்து மும்பைக்குச் சென்ற விமானத்தின் சரக்கு வைக்கும் பகுதியில் புகை கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த விமானம் ராஜ்கோட்டிற்குத் திருப்பி விடப்பட்டது. அந்த விமானத்தில் 194 பேர் இருந்தனர்" என்று தெரிவித்துள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்து பிற்பகல் 2:45 மணிக்கு விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாகவும், விமானம் பிற்பகல் 3:27 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்துப் பயணிகளும் காயமின்றி வெளியேற்றப்பட்ட நிலையில், புகை ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை ஆய்வு செய்யத் தொடங்கினர். விமான நிலைய போலீஸ் ஆய்வாளர் கே.பி. தரேதியா கூறுகையில், விமானி சந்தேகத்திற்கிடமான புகை குறித்து வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு தகவல் தெரிவித்து, குஜராத்தின் ராஜ்கோட்டில் அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார். "விமானத்தினுள் புகை வருவதாக விமானி சந்தேகித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராஜ்கோட் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தைத் தரையிறக்கினார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது," என தரேதியா பிடிஐ-யிடம் தெரிவித்தார். அனைத்துப் பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்டு, விமான நிலைய முனையத்தினுள் ஒதுக்கப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். "விமான நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் விமான நிலையத்திற்கு வந்து விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். விமானத்தில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை," என அந்த அதிகாரி தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/dubai-mumbai-indigo-flight-makes-emergency-landing-in-rajkot-194-passengers-safe




