கோயம்புத்தூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனத்துறையினர் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி வேடர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வாழை பயிரிடப்பட்டிருந்த குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் சிறுமுகை வனச்சரக அலுவலர் தினேஷ் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு இருந்த சோலார் மின்சார வேலிக்கு சட்டவிரோதமாக வீட்டில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. நேற்று காலை அந்த வழியாக யானை கடந்து சென்ற போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது தெரிய வந்தது. இறந்த யானைக்கு 25 வயது இருக்கும். இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர்கள் விஜயராகவன், வெண்ணிலா, கால்நடை மருத்துவர்கள் பிரதீப், யோகேஷ், பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி இறந்த ஆண் காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே மின்சார வாரிய செயற்பொறியாளர் சத்யா, உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் விநாயகமூர்த்தி மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தோட்ட உரிமையாளர் குமார் (65 வயது), விவசாய கூலி தொழிலாளி பாக்கியராஜ் (42 வயது) ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-electrocuted-two-arrested-including-estate-owner




