மைசூரு பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு துணை ஜனாதிபதி, தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கர்நாடகாவின் மைசூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். அவருக்கு வயது 88. அவருடைய மறைவுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அவரது அசாதாரணக்குரல் இந்திய இசையை வளப்படுத்தி, தலைமுறைகள் கடந்து எண்ணற்ற இதயங்களை தொட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களால் 6 தசாப்தங்களுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்தார். அவர் பாரம்பரிய, பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களில் சமமான தேர்ச்சியை வெளிப்படுத்தினார். ஜானகியின் மறைவு இசை உலகத்துக்கும். தேசத்தின் கலைப்பாரம்பரியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினர், அபிமானிகள் மற்றும் ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய இணை மந்திரி எல்.முருகன் பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, தனது இனிமையான குரலாலும், உணர்வுபூர்வமான இசை வெளிப்பாட்டாலும் பல தலைமுறை மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். இந்திய இசை உலகிற்கு அவர் ஆற்றிய பங்கு என்றென்றும் நிலைத்திருக்கும். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் இதேபோல த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தமிழ் குமரன் உள்ளிட்ட திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/passing-of-veteran-playback-singer-s-janaki-vice-president-and-leaders-offer-condolences




