ஹராரே, ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். முதல் டி20 போட்டி ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். டிஆர்எஸ் அதன்படி, போட்டியின் முதல் ஓவரை மயங்க் யாதவ் வீசினார். அப்போது முதல் பந்தை எதிர்கொண்ட ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் பேட்டின் விளிம்பில் பந்து உரசி சென்றதுபோல இருந்தது. ஆனால் நடுவர் ’அவுட்' வழங்கவில்லை. இருப்பினும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் பந்து பேட்டில் பட்டதை உறுதியாக நம்பி, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் உடனடியாக டிஆர்எஸ் எடுக்குமாறு வலியுறுத்தினார். அதன்படி இந்திய அணி ரிவியூ எடுத்தது. அல்ட்ரா-எட்ஜில் பந்து பேட்டில் பட்டது உறுதியானதை தொடர்ந்து, பிரையன் பென்னட் அவுட்டானார். இதன் மூலம் போட்டியின் முதல் பந்திலேயே இந்தியா முதல் விக்கெட்டை கைப்பற்றியது. முதல் பந்திலேயே விக்கெட் இந்த விக்கெட்டின் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை மயங்க் யாதவ் படைத்துள்ளார். இதற்கு முன்பு அர்ஷ்தீப் சிங் அமெரிக்காவுக்கு எதிராகவும், ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர். தற்போது அந்த வரிசையில் மயங்க் யாதவும் இணைந்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/mayank-yadav-scripts-a-rare-record-with-first-ball-wicket-in-ind-vs-zim-harare-t201




