நியூஜெர்சி, 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் யாருடைய கை ஓங்கும் என்று கணிப்பது கடினமாக காரியமாகும். 4-வது முறையாக கோப்பையை கைப்பற்ற அர்ஜென்டினாவும், தங்கள் வெற்றி நடையை தொடர்ந்து 2-வது தடவையாக கோப்பையை கையில் ஏந்த ஸ்பெயினும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேக மில்லை. அர்ஜென்டினா வென்றால். *அதிக முறை உலகக் கோப்பையை ருசித்த அணிகளின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஜெர்மனி, இத்தாலியை (தலா 4 முறை) சமன் செய்யும். *இத்தாலி (1934, 1938), பிரேசிலுக்கு (1958, 1962) அடுத்தபடியாக உலகக் கோப்பையை தக்க வைத்த 3-வது அணி என்ற அரிய பெருமையை பெறும். *உலகக் கோப்பையை கையில் ஏந்தும் 2-வது அதிக வயது வீரராக 39 வயதான மெஸ்சி வலம் வருவார். ஸ்பெயின் வாகை சூடினால். *நடப்பு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வைத்திருக்கும் அணி, தொடர்ந்து உலகக் கோப்பையை யும் சொந்தமாக்கிய 3-வது நிகழ்வாக அமையும். *உலகக் கோப்பையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வென்ற அணிகளின் பட்டியலில் 7-வது அணியாக இணையும். *உலகக் கோப்பையை வசப்படுத்தும் 3-வது இளம் வீரராக 19 வயதான லமின் யமால் திகழ்வார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/உலகக்-கோப்பை-இறுதிப்போட்டி-சாதனை-படைக்க-போகும்-அணி-எது




