சென்னை, கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 80 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏப்.1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1-ந்தேதியும் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக ஏப்ரல் மாத கட்டண உயர்வு, மே 23-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. தற்போது சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம், அம்பத்தூர் அருகில் உள்ள சூரப்பட்டு உள்பட 10-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அமலுக்கு வந்துள்ளது. 2-வது கட்டண உயர்வாகும். அதுபோல், சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350 லிருந்து ரூ.360 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. மே மாதத்திற்கு பிறகு, இது 2-வது கட்டண உயர்வாகும். இதனால் இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கடந்த ஆண்டு மொத்த விலை குறியீடு கட்டணத்தை குறைத்தது. இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கில், கோர்ட்டு முந்தைய விலை குறியீடு கட்டணத்தை, மீண்டும் பயன்படுத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டு, பழைய கணக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தியது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒரு முறை கட்டணம் குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பல தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-fees-to-increase-at-chennais-vanagaram-and-surapattu-toll-plazas-from-midnight




