வேலூர், வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி இ.பி. காலனியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் மேல்பாடியில் காய்கறி மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சஞ்சய் (25 வயது) கடந்த 9-ந்தேதி இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சஞ்சய் மேல்பாடி பகுதியைச் சேர்ந்த அனிதா (22 வயது) என்பவரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக சஞ்சய் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அனிதா காதல் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த மேல்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தனித்தனியாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-commits-suicide-in-grief-over-death-of-beloved-husband-shocking-incident




