Articolo completo
Doctor Vikatan: என் வயது 35. எனக்கு சிறு வயதிலிருந்தே பாதவெடிப்பு பிரச்னை இருக்கிறது. திடீரென அதிகமாகும்... வெடிப்புகளில் இருந்து ரத்தம் வரும். ஆயின்மென்ட் போட்டால் ஓரளவு சரியாகும். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வே கிடையாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் தலத் சலீம் சரும மருத்துவர் தலத் சலீம் சிறு வயதிலிருந்தே பாத வெடிப்பு பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், அப்போதே அதற்கான முறையான சிகிச்சையை எடுத்தீர்களா என்ற விவரம் இல்லை. நிறைய பேருக்கு இருக்கும் இந்தப் பிரச்னையைப் பலரும் ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறி, அலட்சியப்படுத்துவதால்தான் தீவிரமடைகிறது. பருமனானவர்களுக்கு பாதவெடிப்பு தாக்குவது இன்னும் அதிகம். வெடிப்புகள் பெரிதாகப் பிளந்து, இன்ஃபெக் ஷனை ஏற்படுத்தலாம். நீரிழிவு இருப்பவர்களுக்கு இது இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பாதவெடிப்பு குளிர் காலத்தில் அதிகம் பாதிக்கும். பாதங்களைச் சரியாகப் பராமரிக்காதவர்களுக்கு, தவறான காலணிகள் உபயோகிப்பவர்களுக்கு, குதிகால் பகுதி திறந்தநிலையில் உள்ள காலணிகள் அணிபவர்களுக்கு அதிகம் வரலாம். நீரிழிவு, தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், பருமன், எக்ஸிமா போன்றவையும் பாதவெடிப்புக்கு காரணங்களாக இருக்கலாம். உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா என்று பார்க்கவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாவிட்டால் இப்படி பாதவெடிப்பு வருவதுடன், அது பாத நரம்புகளையும் பாதிக்கலாம். 3 டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தேன், 3 துளிகள் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து ஸ்க்ரப் செய்து, பாதங்களில் தேய்த்து இறந்த செல்களை நீக்கலாம்.Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல்... தீர்வு என்ன? பாதப் பகுதியிலுள்ள சருமம் அதீதமாக வறண்டுபோவதால்தான் இப்படி வெடிப்பு வருகிறது என்பதால் அந்தப் பகுதியை வறண்டுபோகாமல் வைத்திருக்க மாயிஸ்ச்சரைசர், பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றைத் தடவி, காட்டன் சாக்ஸ் அணிந்துகொள்ளலாம். குளித்து முடித்ததும் அரை பக்கெட் வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு அல்லது கல் உப்பு சேர்த்து, பாதங்களை ஊறவைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து பியூமிக் ஸ்டோனால் பாத வெடிப்புகளைத் தேய்த்து நீக்கவும். பியூமிக் ஸ்டோன் வேண்டாம் என்பவர்கள், 3 டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தேன், 3 துளிகள் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து ஸ்க்ரப் செய்து, பாதங்களில் தேய்த்து இறந்த செல்களை நீக்கலாம். இதை இரவில் செய்வதானால், ஸ்க்ரப் உபயோகித்துப் பாதங்களைச் சுத்தப்படுத்திய பிறகு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி, அதன் மேல் காட்டன் சாக்ஸ் அணிந்து தூங்கவும். தினம் செய்துவந்தால் ஒரே வாரத்தில் பலன் தெரியும். வெடிப்பு மிக அதிகமிருந்தால் வெதுவெதுப்பான நீரில் 3 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பாதங்களை ஊறவைத்து, பிறகு பெட்ரோலியம் ஜெல்லி தடவலாம். சரும மருத்துவரை அணுகி, உங்களுடைய பல வருட பாத வெடிப்பு பாதிப்புக்கான காரணம் தெரிந்துகொண்டு, சிகிச்சை எடுப்பது தான் சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




