நேற்று, இன்று (ஜூலை 11, 12, 2026) என இரு தினங்களாக மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2026-27 கூட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் ஒரு பகுதியாக, இயக்குநர் மற்றும் நடிகர் விஷால் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது விஷால், "என்னுடைய தேவி அறக்கட்டளை மூலம் படிச்ச என்னோட மகள் தீபிகா என்கிற கல்லூரி மாணவி இன்னைக்கு தனியார் கல்லூரி ஒன்றில் கல்வியில் கோல்டு மெடல் வாங்கியிருக்காங்க. எனக்கு நான் நடிச்ச படங்களுக்கு கிடைக்குற விருதுகளை விட, இது தான் பெருமை" என்று பேசினார். விஷால் - தீபிகாவிஷால் - தீபிகாவிஷால் - தீபிகாவிஷால் - தீபிகாவிஷால் - தீபிகாவிஷால் - தீபிகாதீபிகாவிஷால் - தீபிகா விஷாலுக்கு சர்ப்பரைஸ் மொமெண்டாக தீபிகாவை முகாமிற்கு அழைத்து வந்திருந்தோம். மேடையேறிய தீபிகா, "என்னோட ப்ளஸ் 2-ல 600-க்கு 551 மார்க் வாங்கியிருந்தேன். ஆனா, எங்க குடும்பத்தால என்னை மேல படிக்க வைக்க முடியாத சூழல். அப்போ தான் தேவி அறக்கட்டளை மூலமா கல்லூரில சேர்ந்தேன். இப்போ நான் கோல்டு மெடலிஸ்ட். நன்றி விஷால் சார்" என்று பேசினார். கடலூர் விழமங்கலத்தை சேர்ந்தவர் தீபிகா. அம்மா, அப்பா இருவரும் விவசாயிகள். ப்ளஸ் 2-வில் 600-க்கு 551 மார்க் பெற்றாலும், அவரை குடும்பத்தால் படிக்க வைக்க முடியாத நிதிச் சூழல். இதனால், தீபிகா தேவி அறக்கட்டளையை அணுகியிருக்கிறார். அறக்கட்டளையில் நேர்காணலில் பாஸ் ஆன மாணவிக்கு தனியார் கல்லூரி ஒன்றில் BCA படிப்பிற்கு சீட் கிடைத்திருக்கிறது. தற்போது படிப்பை நிறைவு செய்து கோல்டு மெடலையும் வாங்கியிருக்கிறார். முகாமில் பேசும் போது விஷால், " இந்த குழந்தையை நான் கடன் வாங்கி தான் படிக்க வச்சேன். நான் செஞ்சது சரிதான்னு என் பொண்ணு தீபிகா நிரூபிச்சு காட்டி இருக்காங்க. தமிழ்நாட்டில் நிதி ரீதியாக கஷ்டப்படும் சூழலில் வளரும் மாணவர்கள் யாராக இருந்தாலும் தேவி அறக்கட்டளையை அணுகலாம் என்பதற்கு தீபிகா சிறந்த உதாரணம். வரும் காலத்துல தீபிகாவே நிறைய மாணவர்களை படிக்க வைப்பாங்க அப்படிங்கிறது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் " என்று நெகிழ்ந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/vishal-celebrates-gold-medal-success-of-foundation-beneficiary




