கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அதேவேளை காங்கோவில் அல்கொய்தா, ஐஎஸ் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 13 பேர் பலி இந்நிலையில், உகாண்டா எல்லை அருகே அமைந்துள்ள காங்கோவின் மாம்பசா மாகாணம் பனனா எகலி கிராமத்திற்குள் நேற்று புகுந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். பின்னர், கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடிய பங்கரவாதிகள் வீடுகளில் இருந்த உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். மேலும், வீடுகளை தீவைத்து எரித்துவிட்டு பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/congo-13-civilians-killed-in-terrorist-attack




