ஈரோடு, ஈரோடு பி.பி.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 31). டிரைவர். இவருடைய மனைவி சுகுணா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுகுணாவுக்கும், பி.பி.அக்ரஹாரம் இஸ்மாயில் மைதீன் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான தவுபிக் (28) என்பவருக்கும் இடையே கடந்த 12 ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படு கிறது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 முறை புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் இஸ்மாயில் மைதீன் வீதியில் சுகுணா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுகுணா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சாலை மறியல் இந்த நிலையில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போதிய வசதி இல்லை எனக்கூறி சுகுணாவின் உடல் நேற்று காலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு -பவானி ரோட்டில் சுகுணாவின் உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரோட்டில் கற்கள், பலகைகளை போட்டு அந்த வழியாக எந்தவிதமான வாகனங்களும் செல்ல முடியாதபடி செய்தனர். இதனால் பவானி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை சூப்பிரண்டுகள் முத்துக்குமார், ஜெயசிங் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். போக்குவரத்து பாதிப்பு இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகு ணாவின் உறவினர்கள் கூறும்போது. 'சுகுணாவின் கழுத்தை நெரித்து தவுபிக் தான் கொலை செய்துள்ளார். எனவே அவரை கைது செய்து எங்களிடம் காண்பிக்க வேண்டும். மேலும் அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்' என்று கூறினர். அதைத்தொடர்ந்து போலீசார், தவுபிக்கை கைது செய்து, வீடியோ கால் மூலம் அங்கிருந்தவர்களிடம் காண்பித்தனர். இதையடுத்து சுகுணாவின் உறவினர்கள் மாலை 5 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக பவானி ரோட் டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பதற்றமான சூழ்நிலையும் நிலவியது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் கூறியதாவது:- தவுபீக் திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் காலையில் தவுபிக் வீட்டுக்கு சுகுணா சென்றுள்ளார். அங்கு 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தவுபிக், சுகுணா வின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் சுகுணா மயங்கி கீழே விழுந்து எந்தவிதமான அசைவின்றி கிடந்துள்ளார். இதனால் சுகுணாவை தனது வீட்டுக்கு வெளியே சிறிது தூரம் இழுத்து சென்று ரோட்டோரம் போட்டு விட்டு தவுபிக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து தவுபிக்கை தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தோம். இதற் கிடையில் பிரேத பரிசோதனையில் சுகுணா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி, கள்ளக்காதலனான தவுபிக்கை கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-strangled-to-death-in-erode-fake-lover-arrested



