ஜெய்ப்பூர் டெல்லி, கர்நாடகாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பன்றி காய்ச்சல் பரவல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் பன்றி காய்ச்சல் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், டெல்லி மக்களுக்கு பொது சுகாதார எச்சரிக்கையை அறிவித்துள்ள அரசு, அனைவரும், அடிப்படை சுவாச சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதேபோன்று, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை, கர்நாடகாவில் 4 ஆயிரம் பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு பதிவாகி இருந்தது. இதில், பெங்களூருவில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பன்றி காய்ச்சல் பாதிப்பு பதிவாகி வருகிறது. எனினும், மக்கள் பயப்பட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 146 பேர் டெல்லி, தமிழகம், கர்நாடகாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பன்றிக்காய்ச்சல் பரவல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ராஜஸ்தானின் மருத்துவ மற்றும் சுகாதார துறை மந்திரி கஜேந்திர குமார் கிம்சார் இன்று கூறும்போது, நடப்பு ஆண்டு ஜனவரி முதல் 146 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றார். நோயாளிகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றிற்கு போதிய அளவில் தயாராக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என மருத்துவமனை மையங்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதில், ஜனவரியில் 2 பேருக்கு பதிவான தொற்று, ஆகஸ்டில் 55 ஆக உயர்ந்து உள்ளது. இதனை முன்னிட்டு,, மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் முக கவசம் அணியும்படியும், அடிக்கடி கைகளை நன்றாக கழுவும்படியும், சுவாச தொற்றுகள் கொண்டவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம் என்றும் காய்ச்சல் அறிகுறிகள் கடுமையாக தென்பட்டால் அல்லது தொடர்ந்து காணப்பட்டால் மருத்துவரை அணுகும்படியும் அரசு கேட்டு கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/swine-flu-outbreak-in-rajasthan-after-delhi-karnataka-146-cases-confirmed



