புதுச்சேரி, புதுச்சேரியில் ரவுடி கொலை வழக்கில் கைதான 10 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி கொலை புதுச்சேரி பாக்குமுடையான்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்ற முண்டக்கண்ணு ஆனந்த் (வயது 31). ரவுடியான இவர், கடந்த 18-ந் தேதி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவலில் எடுத்து விசாரணை இந்த வழக்கில் கருவடிக்குப்பத்தை சேர்ந்த சந்துரு (26), லட்டு குமார் (25), நாகராஜ் (26), சந்தோஷ் (23), முன்னாள் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் ஜெகன், எட்வின்பால் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து 10 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் 10 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/ten-arrested-in-rowdys-murder-case-taken-into-custody-for-interrogation




