சென்னை, நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘சூர்யா 47’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் ஹோம்பாலே படக்குழுக்கள் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Wishing the powerhouse. Wishing The One. ❤️ Happy Birthday, sir. From the Team of — Zhagaram Studios (@ZhagaramOffl) July 23, 2026 To THE ONE who keeps reinventing himself while inspiring millions along the way. ❤️ Wishing our dear Sanjay Vishwanath aka garu a very Happy Birthday Let's double the celebrations with the Promo arriving this evening — TEAM… — Sithara Entertainments (@SitharaEnts) July 23, 2026 சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 47’ என அழைக்கப்படும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகர் நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா நசீம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள இப்படத்தை தயாரிக்க உள்ளதாக ஹோம்பாலே நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. சாய் அபயங்கர், சூர்யாவின் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். கயாடு லோஹர் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்களிடம் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘சூர்யா 47’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் ஹோம்பாலே படக்குழுக்கள் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-suriyas-birthday-the-film-crew-released-a-special-poster-to-wish-him




