பாங்காக், ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. தாக்குதல் இந்நிலையில், அந்நாட்டின் நராதிவெட் மாகாணம் புகிடா சமி நகரில் ராணுவ சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் கடந்த புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். பைக்கில் வந்த 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், சோதனைச்சாவடியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/five-soldiers-killed-in-southern-thailand-checkpoint-attack




