மதுரை, விருதுநகர் மாவட்டம், என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சீனித்தாய், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம், ஓய்வூதிய பலன், மாதம் ஓய்வூதியம் பெற, கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், 40,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லண்டனில் பொறியாளராக பணியாற்றும் அந்த ஆசிரியையின் மகன் சதீஷ், அங்கிருந்து முதல்-அமைச்சர் விஜய் அறிவித்த 'லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்' தமிழக அரசின் வாட்ஸ்-அப் எண் மூலம், முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார். அதில், என் தாய் சீனித்தாய் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்கு தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்று பெற, பி.இ.ஓ.,வுக்கு, 40,000 ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். ஓய்வூதிய பலன்கள் கிடைத்த நிலையில், மாத ஓய்வூதியம் கிடைக்கவிடாமல் இழுத்தடிக்கின்றனர். ஓய்வூதியம் கிடைக்கவும், 40,000 ரூபாயை திரும்ப பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக முத்துக்குமார் கூறுகையில்," இதுகுறித்த புகார் மீது திருமங்கலம் தொடக்கக்கல்வி டி.இ.ஓ., விசாரணை நடத்தி புகாரில் உண்மை இல்லை என அறிக்கை அளித்து விட்டார். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-received-from-london-to-chief-minister-vijay




