செங்கல்பட்டு, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 3-ந்தேதி தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 5 முனை போட்டி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தொகுதியில் 5 முனை போட்டி நிலவுவதால், ஒவ்வொரு கட்சி பிரமுகர்களும் மதுராந்தகத்தில் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மூத்த தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு தி.மு.க. தரப்பில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மதுராந்தகத்தில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கறிஞர் அணி கூட்டம் இன்று மாலை தி.மு.க. வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்றால் அதனை எதிர்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அங்கு ‘வார் ரூம்’ திறக்கப்பட உள்ளது. மு.க.ஸ்டாலின் பிரசாரம் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 3-ந்தேதி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் சிறப்புரையாற்றுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-campaigns-for-dmk-candidate-in-madurantakam-on-oct-3




