சென்னை, 'கடைசி விவசாயி', 'குட் நைட்', 'மெய்யழகன்', 'தாய்க்கிழவி' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை ரேச்சல் ரெபேக்கா. 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். தற்போது விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், படத்தின் வெளியீடு குறித்து செய்தியாளர்களிடம் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். "படத்திற்குள் நடந்த விஷயங்கள் எனக்கு தெரியாது" பேட்டியில் பேசிய ரேச்சல் ரெபேக்கா, "படத்திற்குள் என்னென்ன பிரச்சினைகள் நடந்தன என்பது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. பொதுவாக நான் நடித்த படம் வெளியாகும்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பேனோ, அதே மகிழ்ச்சிதான் இப்போதும் இருக்கிறது" என்று கூறினார். "முழுமையாக கொண்டாட முடியவில்லை" மேலும் அவர் கூறுகையில், "போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் படம் வெளியானதால், அந்த மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாட முடியவில்லை. என் மனம் முழுவதும் மாணவர்களுடன்தான் இருக்கிறது. அவர்கள் நடத்தும் போராட்டம் குறித்த எண்ணமே அதிகமாக இருந்ததால், படத்தின் வெற்றியை முழுமையாக கொண்டாட முடியவில்லை" என்றார். "விஜய் முதல்வராக நடித்த முதல் படம் என்று சொல்ல முடியாது" விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இது விஜய் முதல்-அமைச்சராக நடித்த முதல் படம் என்று என்னால் சொல்ல முடியாது. அவர் அதில் நடிகராகத்தான் நடித்துள்ளார். நான் இயக்குநரும் இல்லை. அதனால் அதுகுறித்து எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை" என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/couldnt-celebrate-the-films-release-due-to-the-protests-jananayagan-actress-rachel-rebecca




