கொல்கத்தா, அரசியலில் பா.ஜனதாவை இல்லாமல் ஆக்கும்வரை நான் ஓயமாட்டேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலேயே பா.ஜனதாவின் உண்மை முகத்தை மேற்கு வங்காள மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். நான் அரசியல் துறவறம் மேற்கொள்ள போவதில்லை. பா.ஜனதாவை இல்லாமல் ஆக்கும்வரை நான் ஓயமாட்டேன். தேசிய குடிமக்கள் பதிவேட்டை பின் வாசல் வழியாக அமல்படுத்தும் முயற்சிதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு. மக்கள்தொகை படிவங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பும், தனிப்பட்ட தரவுகளை பகிர்வதற்கு முன்பும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் சேமிப்பு பணத்தை எடுத்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/not-taking-political-sanyas-wont-stop-till-bjp-is-in-obscurity-mamata



