ஆம்ஸ்டெல்வின், 16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்றுக்கு வந்துள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்படுள்ளன. இதன்படி 'இ' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, நெதர்லாந்து, 'எப்' பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம் பெற் றுள்ளன. 2-வது சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். இரண்டாவது சுற்றை பொறுத்தமட்டில் ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே விளையாடும். ஏற்கனவே லீக் சுற்றில் சந்தித்த அணியுடன் மோதாது. உதாரணமாக இந்திய அணி, ஏற்கனவே இங்கிலாந்துடன் மோதி விட்டதால் மீதமுள்ள இரு அணிகளுடன் (நெதர் லாந்து, அர்ஜென்டினா) மட்டும் களம் காணும். இதன்படி ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, 2-வது சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை), தியரி பிங்க்மேன் தலைமையிலான நெதர்லாந்தை எதிர் கொள்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/hockey/hockey-world-cup-india-vs-netherlands-clash-today




