புதுடெல்லி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் இன்று 34-வது நாளை எட்டி உள்ளது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்தநிலையில், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு செல்லவேண்டும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் மோடி டுவீட் செய்து உறுதி அளித்ததால், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும். சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் தொடராமல் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் எனது வீட்டிலிருந்தே உணவு அனுப்பி வைக்கிறேன் என்றார். வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளித்து, ஒரு நாள் கழித்து, நடிகர் சல்மான் கான், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும், வாங்சுக்கிற்கு வீட்டிலிருந்து உணவு அனுப்புவதாகவும், கசிவுகள் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற மாணவர்களை வீட்டிற்குத் திரும்புமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sonam-its-done-bro-salman-khan-urges-wangchuk-to-end-fast-asks-students-to-go-back




