சென்னை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கோரிக்கை வைப்பாரா? தமிழ்நாடு உரிமைகள் விட்டு போய்விடக்கூடாது. தமிழ்நாடு உரிமைகளை நீதிமன்றத்தின் முலம் பெறலாம். தண்ணீர் பெறுவது, மேகதாது அணை கட்ட விடாமல் தடுப்பது ஆகியவை மத்திய அரசின் கையில் உள்ளது. மத்திய அரசின் அனுமதியில்லாமலோ பிரதமரின் அனுமதி இல்லாமலோ மேகதாது அணை கட்ட முடியாது. மேகதாது அணைக்கு அனுமதி வரும் போது கட்டவிடாமல் தடுக்க வேண்டும் என பிரதமரிடம் அன்புமணி சொல்ல வேண்டும். இதை பிரதமரிடம் சொல்வாரா? எம்.ஜி.ஆர். அப்பொதைய கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேசிய போது தண்ணீர் கேட்ட வரலாறு உள்ளது. நாம் இந்தியா- பாகிஸ்தான் கிடையாது. கர்நாடகாவிலும் தமிழர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கன்னடர்கள் உள்ளனர். காவிரி என்பது தமிழ்நாடு வாழ்வாதார பிரச்சினை. காவிரி நீர் நம்முடைய ஜீவநதி. காவிரியில் நமக்கு நியாயப்படி தண்ணீர் கிடைக்க வேண்டும். முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதை அரசியலாக்குவது நியாயமில்லாதது. தடுக்க வேண்டும் முதல்-அமைச்சர் போகிறாரா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை. அதற்கு முன் போக கூடாது என்று பேசுவது அதிர்ச்சியாக உள்ளது. 2 மாநில முதல்-அமைச்சர்கள் சந்திப்பதில் என்ன தவறு என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டு உள்ளது. நியாயப்படி நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தான் கேட்கிறோம். தமிழ்நாடு உரிமைகளை எந்த காலத்திலும் விட்டு கொடுக்க கூடாது என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு முயன்றாலும் மத்திய அரசு அனுமதியில்லாமல் கட்ட முடியாது. மேகதாது அணை கட்டவிடாமல் தடுக்க வேண்டும் என்பதை மோடியிடம் அன்புமணி கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/will-anbumani-urge-modi-to-prevent-the-construction-of-the-mekedatu-dam-manickam-tagore-asks




