சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் காய்ச்சல் ஏற்பட்ட 4,500 பேரில் 160 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. டெங்கு பாதிப்பு இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல் ஏற்பட்ட 2 ஆயிரம் பேரில் 140 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது, இது சற்று அதிகம் ஆகும். அடையாறு, அண்ணா நகர், வளசரவாக்கம் மண்டலங்களில் பாதிப்பு அதிக அளவில் பதிவாகியுள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தல் இதனையடுத்து, இன்புளூயன்சா ஏ, ரைனோ வைரஸ், ஆர்.எஸ்.வி. உள்ளிட்ட வைரஸ்கள் பரவி வருகின்றன என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், அது மற்றவர்களுக்கும் விரைவாக பரவக்கூடும். அதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொசுக்கள் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வீடுகளில் தண்ணீர் தேங்கவிடாமல், சுற்றுப்புற தூய்மையை பேணும்படியும், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள், கழிவுகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்கவும் மருத்துவர்கள் தீவிர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-fever-cases-in-chennai-and-suburbs-doctors-advisory




