திருப்பதி, திருமலை திருப்பதி கோவில் நவம்பர் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தநிலையில், திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு நாளை (ஆக. 25) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் 2026 நவம்பர் மாத ஒதுக்கீடு கடந்த ஆக. 18-ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த நிலையில், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, நவம்பர் மாதத்துக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் இன்று(ஆக. 24) மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியாகிறது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டு நவம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு நாளை(ஆக. 25) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு வெளியீடு திருமலை மற்றும் திருப்பதியில் நவம்பர் மாத அறை ஒதுக்கீடு நாளை மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/tirupati-rs-300-special-darshan-tickets-to-be-released-tomorrow




