தூத்துக்குடி, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யக் கோரி ஆழ்வார்கற்குளம் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். கிராம மக்கள் குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பா என்பவரை 9.7.2026 அன்று கொலை செய்ய முயன்ற சம்பவம் நடைபெற்றது. இந்த கொலை முயற்சி வழக்கில், ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். எனினும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்களை குற்றப் பட்டியலில் சேர்க்காமல் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு இந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆழ்வார்கற்குளம் பகுதியில் மீண்டும் ஜாதி மோதல்கள் ஏதும் நிகழாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-blockade-demanding-arrest-of-culprits-in-attempted-murder-case




