பெங்களூரு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, 'கிரேட்டர் பெங்களூரு அத்தாரிட்டி' (GBA) வரம்பிற்குள் வரும் 5 மாநகராட்சிகளுக்கான தேர்தல்களை டிசம்பர் மாதத்திற்குள் நடத்த மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். முன்னதாக GBA தேர்தல்களை ஜூன் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு முதலில் உத்தரவிட்டிருந்தது. நிர்வாக ரீதியான சிரமங்களைக் குறிப்பிட்டு மாநில அரசு கூடுதல் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, அந்த காலக்கெடு பின்னர் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலைச் சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR) செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டு, அந்தக் காலக்கெடுவை டிசம்பர் இறுதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டி.கே.சிவக்குமார் கூறுகையில், “டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களையும் நாங்கள் நடத்தி முடிப்போம். மாவட்ட, வட்ட மற்றும் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி மாநகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்தி முடிக்க கர்நாடக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/bengaluru-municipal-elections-to-be-held-by-december-karnataka-deputy-chief-minister-dk-shivakumar




