தென்காசி, சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி ஆடித்தபசு விழாவை ஒட்டி ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியும் சிவனும் ஒன்றே அரியும் சிவனும் வேறல்ல, ஒன்றுதான் என உலகத்திற்கு உணர்த்தும் வகையில், தவமிருந்த அம்பாளுக்கு சங்கர நாராயணராக சுவாமி காட்சி அளிக்கும் 'ஆடித்தபசு' திருவிழா, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆடித்தபசு இந்த ஆண்டும் வருகிற ஜூலை 18 -ம் தேதி கொடியேற்றத்துடன் 12 நாள் விழா தொடங்குகிறது. இதில் 11 -ம் நடக்கும் முதன்மையான விழாவே ஆடித்தபசு ஆகும். ஜூலை 28 -ம் தேதி மாலை அம்பாளுக்கு சங்கர நாராயணராக சுவாமி காட்சி அளிக்கும் ஆடித்தபசு காட்சி நடைபெற உள்ளது. அதன்பின்னர் சங்கர லிங்கராக அம்பாளை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு அன்று இரவில் நடைபெறும். இந்த திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்துக்கு ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.1 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் கூறியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தேர்வுகள் இருப்பின் உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-tenkasi-district-on-july-28




