தஞ்சாவூர், தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்த நிலையில், ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் 13 அடி உயரமுடைய மகாநந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/the-boys-stabbed-pansi-lal-with-a-knife-they-had-with-them-and-fled-the-scene




