கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெட்டுதுறை புதுவல் பகுதியைச் சேர்ந்தவர் மெர்சி (65). இவர் கடினங்குளம் சான்னாங்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மகள் பிந்து மற்றும் பிந்துவின் கணவர் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். பிந்துவின் மகனான ஷிபின் (23) மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் அவ்வப்போது பாட்டி மெர்சியின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். மூதாட்டி மெர்சி அங்குள்ள மீன்பிடி வலை பின்னும் கூடத்தில் கூலி வேலை செய்து பேரன்களை கவனிப்பதுடன் தனது வாழ்க்கையையும் நடத்தி வந்துள்ளார். அவரது பேரன் ஷிபின் தொடர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். நேற்று காலையிலும் ஷிபின் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். காலை நேரத்திலேயே குடித்துவிட்டு வந்த பேரனை மெர்சி கண்டித்துத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷிபின், பாட்டி மெர்சியை சரமாரியாகத் தாக்கியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் பலமாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். கைதுசெய்யப்பட்ட ஷிபின் பாட்டியை குத்திய கையோடு, ரத்தம் சொட்டும் கத்தியைக் கையில் ஏந்தியபடி அருகிலிருந்த மீன்பிடி வலை பழுதுபார்க்கும் இடத்திற்கு ஷிபின் ஓடினார். அங்கிருந்த தொழிலாளர்களிடம், "நான் பாட்டியைக் கொன்னுட்டேன்" என்று கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மெர்சி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு தாலுகா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கொலைச் செய்யப்பட்ட மெர்சி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மூதாட்டியின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய ஷிபினை, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் கடினங்குளம் அருகே உள்ள ஒரு மதுபானக் கூடம் அருகே வைத்து போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/in-kerala-a-man-killed-his-old-grand-mother-got-arrested




