சென்னை, ஆடு, மாடு திருடுவதைப் போல எம்.எல்.ஏ.க்களை திருடுகிறது தவெக.ஒரிஜினல் களவாணி விஜய்தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக கூறியுள்ளார். விஜய் விமர்சனம் நேற்றைய தினம் கரூர் சென்ற முதல்-அமைச்சர்ஜோசப் விஜய் எதிர்க்கட்சியான திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு அக்கட்சியை சார்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவில் இருந்து ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் விஜய்யின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்-அமைச்சரின் கரூர் பேச்சுக்கு பதிலடியை பதிவு செய்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எம்.எல்.ஏ திருடர்கள் தவெக ஒரு முதல்-அமைச்சர் களவாணி என்று பேசுகிறாரே, இதே போல் அவரை பார்த்து சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும். விஜய் தான் களவாணி. நம்ம ஊர்ல ஆடு திருடன், மாடு திருடன் என்று சொல்வாங்க. எங்க ஊர்ல சிலர் ஆடு மட்டும் தான் திருடுவான். சிலர் மாடு மட்டும் திருடுவான். அதே போல் எம்.எல்.ஏ. திருடர்கள் நீங்கள். எம்எல்ஏ களவாணி. முதன் முறையாக அமமுக எம்எல்ஏவை ஆசை வார்த்தை காட்டி திருடுனீங்க. இதை எதற்காக அடிக்கடி சொல்கிறேன் என்றால் உண்மையாக நடந்தது. கவர்னரிடம் கொடுக்கப்பட்ட அந்த லெட்டர் போர்ஜரி. இப்படி ஆட்சி அமைப்பதற்கே தகிடு தத்தங்கள் செய்தவர்கள். எங்கள் அமமுக எம்எல்ஏவை குதிரை பேரம் செய்யவில்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். இதில் யார் எம்எல்ஏ களவாணிகள். இப்படி மற்ற கட்சிகளை வெற்றி பெற்ற அகம்பாவத்தில் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-ttv-dinakarans-answer




