சென்னை, மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராடி, இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவரும், அகிம்சை எனும் மந்திரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் வரலாற்றையே புரட்டிப்போட்டவருமான தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம் இன்று. எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, சமூக சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றோடு, சத்தியத்தை ஆயுதமாகவும், அகிம்சையைப் பாதையாகவும் கொண்டு, மானுட நலனுக்காகவும், உயர்வுக்காகவும் ஓயாமல் உழைத்த காந்தியடிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராடி, இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவரும், அகிம்சை எனும் மந்திரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் வரலாற்றையே புரட்டிப்போட்டவருமான தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம் இன்று. எளிமையான வாழ்க்கை, உயர்ந்த… — TTV Dhinakaran (@TTVDhinakaran) October 2, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/he-worked-tirelessly-for-the-welfare-of-humanity-ttv-dinakaran-praises-mahatma-gandhi




