சென்னை, லண்டன் பயணம் தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதற்கான இலக்கை முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதன் ஒரு பங்காக, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தமிழகத்தில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆய்வு மேம்பாட்டு வசதிகளை நிறுவுவதற்காக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துக்கும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையே கடந்த 14-ம் தேதி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.11,000 கோடி முதலீடு அதன்படி 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான ‘சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்’, தனது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இது சர்வதேச வாகன உற்பத்தி சங்கிலியில் தமிழகத்தின் இடத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும். ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க தமிழகத்தை தேர்வு செய்துள்ளது. இதற்கான ரூ.3,000 கோடி முதலீட்டுக்கான விருப்பக் கடிதத்தை முதல்-அமைச்சரிடம் அந்நிறுவனம் சமர்ப்பித்தது. இதுதவிர, இங்கு உலகளாவிய திறன் மையத்தை அமைக்க ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மையம், சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில், சென்னை மவுண்ட் - பூந்தமல்லி சாலைப் பகுதியில் அமையவுள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் துறைகளில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள தனது திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரிட்டனைத் தலைமையிடமாக கொண்ட வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், மேம்பட்ட மின்மாற்றி களை தயாரிப்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடியை முதலீடு செய்கிறது. இதனால் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழக இளைஞர்களின் லட்சியம். இதுதவிர அசோக் லேலண்ட் நிர்வாகத் தலைவர் தீரஜ் இந்துஜா, பினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி.சாப்ரி உள்ளிட்டோரும் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தனர். அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ‘வெற்றி’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட ரூ.2,500 கோடி முதலீட்டின் முன்னேற்றம் குறித்து அவர்கள் விளக்கினர். மேலும், தமிழகத்தில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும், இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், இந்த முதலீடுகள் தமிழக இளைஞர்களின் லட்சியங்களை பிரதிபலிப்பதாகவும் பிரிட்டன்-இந்தியா பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழகத்தில் முதலீடு செய்ய இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். நாளை சென்னை திரும்புகிறார் இதன் விளைவாக பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் இடையே கொள்முதல் ஒப்பந்தங்கள், ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் வருகை, அக்டோபரில் இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் பிரதிநிதிகள் சென்னை வருகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இந்த நிலையில், லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் விஜய் நாளை (வியாழக்கிழமை) சென்னை திரும்புகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-returning-to-chennai-tomorrow




