புதுடெல்லி, 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரில் செப்டம் பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள 43 விளை யாட்டுகளில் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டும் ஒன்று. கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன்படி நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதியில் ஆடுகிறது. அனேகமாக இந்தியா அரையிறுதியில் பாகிஸ்தானை சந்திக்க வேண்டி வரலாம். ஆப்கானிஸ்தான், ஜப் பான், நேபாளம் (ஏ பிரிவு), ஹாங்காங், மலேசியா, ஓமன் (பி பிரிவு) ஆகிய அணிகள் லீக் சுற்றில் மோதி ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன் னேறும். பெண்கள் பிரிவில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இங்கு லீக் சுற்று கிடையாது. நேரடியாக நாக்-அவுட் சுற்றில் விளையாட உள்ளது. நடப்பு சாம்பியன் இந்தியா காலிறுதியில் ஜப்பானை சந்திக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/asian-cricket-india-and-pakistan-to-play-directly-in-the-quarter-finals




