சேலம், கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.70 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வினாடிக்கு 7,833 கன அடியில் இருந்து 6247 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 80.70 அடியாகவும், நீர் இருப்பு 42.658 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-mettur-dam-has-declined




